பொதுஜன முன்னணியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருத்த பொல்கம்பொல ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பு

Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணியில் போட்டியிடும் சில அபேட்சகர்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர்கள் இன்று (12) ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Share This Post

NEW