அம்பிட்டிய புராண திவ்ரும் போதிமளு விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட 12 அடி உயர புத்த பகவானின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு

அம்பிட்டிய புராண திவ்ரும் போதிமளு விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட 12 அடி உயர புத்த பகவானின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு

கண்டி, அம்பிட்டிய புராண திவ்ரும் போதிமளு விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 அடி உயரமான புத்த பகவானின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது.

தம்பதெனிய ஆட்சிக்காலம் முதல் இன்று வரை இயங்கிவரும் இந்த புராதன விகாரை, ஸ்ரீ மகா போதியிலிருந்து உருவாகிய மூன்று அரச மரக்கன்றுகளை தன்வசம் கொண்டுள்ள வணக்கஸ்தலமாக விளங்குகின்றது.

இன்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த பகவானின் திருவுருவச் சிலையை திறந்து வைத்ததுடன், அதற்கு மலரஞ்சலியும் செலுத்தினார்.

புத்த பகவானின் திருவுருவச் சிலையை நிர்மாணித்த சிற்பிகள் ஜனாதிபதி அவர்களின் பாராட்டை பெற்றனர்.

விகாரையின் நிர்வாக சபையினரால் நினைவுப் பரிசொன்றும் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

ராமஞ்ஞ மகா நிக்காயவின் மகா நாயக்கர் சங்கைக்குரிய நாபாண பேமசிறி தேரரினால் தலைமை வழங்கப்பட்ட இந்த புண்ணிய நிகழ்விற்கு அஸ்கிரி தரப்பின் அநுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், விகாராதிபதி சங்கைக்குரிய கொளம்பிஸ்ஸே திலக்கசிறி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறு்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, திலும் அமுனுகம ஆகியோரும் சிலையை நிர்மாணிப்பதற்கு பூரண நிதி அன்பளிப்பினை வழங்கிய மனுலத் நந்தன உள்ளிட்ட பக்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW