ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளின் பராமரிப்பிற்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

இல.165, கும்புக்வெவ, பலல்ல, மஹவ பிரதேசத்தில் வசிக்கும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தனது முதலாவது பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இராணுவ சிப்பாயான யூ.கே.சி.எஸ்.ஞானரத்ன மற்றும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தம்பதியினர் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அவர்களது குழந்தைகளின் பராமரிப்பிற்காக 20 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.

சுமார் ஒரு மாத வயதையுடைய இஷித இந்துவர, இஷினி சதெத்மா, இனிது கவித்மா மற்றும் இனிசி ஒகித்மா ஆகிய தமது நான்கு குழந்தைகள் சகிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த குறித்த தம்பதியினர் ஜனாதிபதி அவர்களிடமிருந்து நிதி அன்பளிப்பினை பெற்றுக்கொண்டனர்.

 

Share This Post

NEW