கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்ய உறுதியளித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தலைமையில் மார்ச் 15 ஆம் திகதி சார்க் அரச தலைவர்களுக்கிடையில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த நிதியம் தாபிக்கப்பட்டது.

Share This Post

NEW