“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்

“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்

அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இலங்கையில் பிரதான விகாரையொன்றை மையமாகக்கொண்டு இடம்பெறும் “சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் 55ஆவது நிகழ்வு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையை மையமாகக்கொண்டு இடம்பெற்றது.

இன்று முற்பகல் களனி புண்ணிய பூமிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள்,  சங்கைக்குரிய கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்ஷித நாயக்க தேரரை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவெனாதிபதி ராஜகீய பண்டித சங்கைக்குரிய லுணுகம்வெஹெரே நாரத தேரர் தர்ம போதனைகளை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அவர்கள் அதனை செவிமடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பிரதேச பக்தர்கள் பலரும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW