சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இன்று முழு நாட்டிற்கும் ஒரு சவாலாக மாறியுள்ள சிறுநீரக நோய் தடுப்பிற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய ரீதியான ஒரு தேவைப்பாடாகக் கருதி அதற்கு செயல் ரீதியாக பங்களிப்புச் செய்தல் சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாகுமென இதன்போது ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் நன்மை கருதி பல்வேறு நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுநீரக நோய் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்> அவர்களை ஊக்குவித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் நோயாளர்களின் வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்> சிறுநீரக நோய் காரணமாக பெற்றோர்களை இழந்த உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் இதில் உள்ளடங்குவதுடன் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சிறுநீரக நோய் பரவி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்> இந்நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள்> நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் இரத்த சுத்திகரிப்புக்கு செலவாகும் அதிக தொகையை ஈடுசெய்ய முடியாததன் காரணமாக அம்மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்> இதுபற்றி விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, விஜித் விஜயமுனி த சொய்சா, பைசர் முஸ்தபா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன்> சிறுநீரக நோய் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல ஆகியோர் உள்ளிட்ட குழுவினரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Share This Post

NEW