ஜனாதிபதியின் எண்ணக்கருவின்பேரில் நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இன்றும் பல திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் எண்ணக்கருவின்பேரில் நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இன்றும் பல திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொலன்னறுவையில் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின்பேரில் ஆரம்பிக்கப்பட்ட “எழுச்சிபெறும் பொலன்னறுவை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (14) இடம்பெற்றது.

அந்த வகையில் பாடசாலை பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பன்சல்கொடெல்ல சோமாதேவி ஆரம்ப பிரிவு பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டுமாடி வகுப்பறை கட்டிடம் இன்று முற்பகல் ஆளுநர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையில் நிலவிவந்த நீண்டகால குறைபாட்டை நிவர்த்திக்கும் வகையில் 132 இலட்ச ரூபா செலவில் இந்த புதிய வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சமய புத்தெழுச்சியை நோக்கமாகக்கொண்டு வெஹெரகல, மல்தெனிய ஸ்ரீ தர்மரக்பித்த விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அன்னதான சாலை இன்று ஆளுநர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் மகாசங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

சங்கைக்குரிய வெல்லபட பாரத்வாஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் பிக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 81 இலட்ச ரூபா செலவில் பிஹிடிவெவ சாரானந்த பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடமும் இன்று ஆளுநர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளினால் மகாசங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

சாரானந்த பிரிவெனாபதி சங்கைக்குரிய வேரகல சந்ரசிறி தேரர் உள்ளிட்ட மாகாணத்தின் மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW