ஜனாதிபதி வெளிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி வெளிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (10) பிற்பகல் வெளிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

திறந்த வெளியில் நடமாடிக்கொண்டிருந்த சிறைக் கைதிகளுடன் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களது விபரங்களை கேட்டறிந்தார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் பாவனையின் காரணமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருபவர்களாகும்.

சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு போதுமான இடத்தைப் பார்க்கிலும் மும்மடங்கு எண்ணிக்கையானவர்கள் சிறையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பிழையான தகவல்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு அதிக காலம் செல்வதாகவும் அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமக்கு நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்கு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

Share This Post