தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு வாழ் இலங்கை மகாசங்கத்தினர் ஆசி

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு வாழ் இலங்கை மகாசங்கத்தினர் ஆசி

இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய உன்னத தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முயற்சியை வெளிநாட்டு வாழ் இலங்கை மகாசங்கத்தினர் பாராட்டியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்காக தனது பூரண ஆசிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கென்யாவின் நைரோபி பெளத்த விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய யடிராவண விமல தேரர் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (16) முற்பகல் நைரோபி நகரை அண்மித்த நைரோபி பௌத்த விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வழங்கிய விகாராதிபதி, அதனைத்தொடர்ந்து ஆற்றிய விசேட போதனையின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தூபியொன்றுடன் தியான மண்டபத்தையும் பிக்குகள் தங்குமிடத்தையும் கொண்ட இந்த தேரவாத பௌத்த விகாரையானது, ஒரு தசாப்த காலமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்று முற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக பெருமளவிலான கென்ய மக்கள் விகாரையில் கூடியிருந்ததுடன், அங்கிருந்த குழந்தைகள் வண்ண மயமான கலாசார நிகழ்வொன்றை அரகேற்றி ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி சங்கைக்குரிய யடிராவண விமல தேரரை சந்தித்து சுகம் விசாரித்ததுடன், பிரிகரைகளையும் கையளித்தார்.

தேரரினால் பிரித் பராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வழங்கப்பட்டது.

இலங்கையில் பௌத்த சாசனம் மற்றும் மத புத்துயிர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

விகாராதிபதியினால் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

Share This Post

NEW