தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் முற்போக்கு தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (15) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

முற்போக்கு தொழிற்சங்க தேசிய மத்திய நிலையம், இலங்கை சுதந்திர ஊழியர்சங்கம், முற்போக்கு அரச ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்

தொழிற்சங்கங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொள்வது குறித்து தான் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சிறியதொரு தரப்பினால் ஏற்படுத்தப்படும் தடைகளை பொருட்படுத்தாது வினைத்திறனான அரச சேவையை தாபிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. பாரம்பரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பதிலாக மக்களின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய உளப்பாங்கு மாற்றமொன்றை அனைத்து தொழிற்சங்கங்களிடமும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share This Post