பெல்லன்வில ரஜமகா விகாரையில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த இல்லம் ஜனாதிபதியின் பங்கேற்பில் திறந்து வைப்பு

பெல்லன்வில ரஜமகா விகாரையில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த இல்லம் ஜனாதிபதியின் பங்கேற்பில் திறந்து வைப்பு

வரலாற்று முக்கியத்துவமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரையின் (யதிவர சமரு பஹய) ஞாபகார்த்த இல்லத்தை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (04) முற்பகல் இடம்பெற்றது.

பெல்லன்வில விகாரையின் முன்னாள் விகாராதிபதி சங்கைக்குரிய பெல்லன்வில சோமரத்தன நாயக்க தேரர் மற்றும் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தன அனுநாயக்க தேரர் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் அக்கமகா பண்டித்த சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW