“மகாவலி தொழில் முயற்சியாளர்களுக்கான விருது விழா – 2019” ஜனாதிபதி தலைமையில்…  

“மகாவலி தொழில் முயற்சியாளர்களுக்கான விருது விழா – 2019” ஜனாதிபதி தலைமையில்…   

மகாவலி நீரால் போஷிக்கப்படும் நாற்திசைகளிலும் கைத்தொழில் முயற்சியினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு உரமளிக்கும் தைரியமான மனிதர்களை முதன்முறையாக பாராட்டி கௌரவிக்கப்படும் “மகாவலி தொழில் முயற்சியாளர்களுக்கான ஜனாதிபதி விருது விழா 2019” ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கும் மகாவலி வலயங்களின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறந்த தொழில் முயற்சியாளர்கள் மூவருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்ததுடன், 10 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என்ற வகையில் 30 தொழில் முயற்சியாளர்களுக்கு இதன்போது பதக்கங்கள் வழங்கப்பட்டன.

 இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW