மறைந்த பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சாகர சரத்சந்திர அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

திடீர் வாகன விபத்தில் உயிரிழந்த பொரல்ல பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சாகர சரத்சந்திர அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பொரல்ல தனியார் மலர் சாலைக்கு இன்று (11) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கும் பொலிஸ் திணைக்களத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

Share This Post

NEW