அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் தந்தையாரான காலஞ்சென்ற நிஹால் பெர்ணான்டோவின்  பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (08) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

 

Share This Post

NEW