அதுல்கோட்டே ஸ்ரீ மஹிந்தாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு

அதுல்கோட்டே ஸ்ரீ மஹிந்தாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு

அதுல்கோட்டே ஸ்ரீ ம ஹிந்தாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையின் பிரதான சங்க நாயக்கர், இலங்கை நிபோன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் நினைவுப் பலகையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் புதிய கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளித்தார்.

விகாரையின் முன்னேற்றத்திற்காக முன்னோடிகளாக செயற்பட்ட ஆரம்ப காலகட்ட ஆசிரியர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர் இப்புண்ணிய நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

ஜப்பானியர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஐந்து மன்றங்களால் வழங்கப்பட்ட 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்தில் 1,500 மாணவர்களுக்கு அறநெறிக் கல்வியை வழங்கும் அறநெறிப் பாடசாலையை முன்னெடுத்து செல்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பயற்சி நிகழ்ச்சிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கலை அரங்கமும் இந்த கட்டிடத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளது.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கயந்த கருணாதிலக, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய ஆகியோரும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பக்தர்கள் பெரும் எண்ணிக்கையானோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW