வரலாற்று சிறப்புமிக்க சீனிகம தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…

வரலாற்று சிறப்புமிக்க சீனிகம தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…

வரலாற்று சிறப்புமிக்க தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், புத்த பகவானின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்த ஜனாதிபதி அவர்கள், அவற்றை வணங்கி ஆசிபெற்றதோடு,  இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக கோவில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

அமைச்சர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேவர்தன, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சீனிகம தெவொல் கோவில் பொறுப்பாளர் சரத் திசெந்துவாஹந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW