களுத்துறை, ஏதகம “போசத் மாபிய செவன” நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

களுத்துறை, ஏதகம “போசத் மாபிய செவன” நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பௌத்த சாசனத்திற்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களின் பாதுகாப்பு கருதி களுத்துறை, ஏதகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “போசத் மாபிய செவன” நிலையம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

பயாகல, மலேகொட ஸ்ரீ புஷ்பாராம விகாராதிபதி சங்கைக்குரிய பெந்தர வல்லாவிட்ட பிரதான சங்கநாயக்கர் வண. மலேகொட நந்த தேரரின் எண்ணக்கருவிற்கமைய இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் சுமார் ஐம்பது பேர் அளவில்  தங்குமிட வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து “போசத் மாபிய செவன” நிலையத்தை  திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டார்.

அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விழாவின்போது இந்நிலையத்தின் நிர்மானப் பணிகளுக்காக நன்கொடை வழங்கிய ஞானா டி சில்வா அம்மையாருக்கு ஜனாதிபதி அவர்களால் நினைவு பரிசொன்றும் வழங்கிவைக்கப்பட்டது. அப்பரிசை அவரின் புதல்வர் பெற்றுக்கொண்டார். 

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்கர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், வண. இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர் யு.ஜி.சீ.ஜயலால் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW