புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், நேற்றைய தினம் ஜனாதிபதி பதவியின் கடமைகளை நிறைவுசெய்து கொண்டார். இதன்போது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவரது எதிர்கால நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெற தனது ஆசிர்வாதங்களையும் தெரிவித்தார். 

இதேவேளை அனைவருடனும் இணைந்து தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் தனது பொறுப்புக்களை எதிர்காலத்திலும் நிறைவேற்றுவதற்கு உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

Share This Post

NEW