ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட அன்னதான நிகழ்வு மற்றும் ஆசிர்வாத பூஜை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட அன்னதான நிகழ்வு மற்றும் ஆசிர்வாத பூஜை

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் 68 வது பிறந்த நாளான இன்று (03) அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட அன்னதான ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

68 மகா சங்கத்தினர் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ராமஞ்ய மகா நிக்காய ஸ்ரீ கல்யாணி யோகஸ்ராம அமைப்பின் பிரதான அநுநாயக்கர் வண.பகலபிட்டியல ஜனநந்தாபிதான தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

இதன்போது மகா சங்கத்தினால் பிரித்பாராயனம் செய்யப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இதனிடையே ஜனாதிபதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஆசிவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஆசிர்வாத போதிப் பூஜை இன்று பிற்பகல் ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்றதோடு, ஜனாதிபதி அவர்கள் அதில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கங்காராம விகாரையின் விகாராதிபதி வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரரினால் சமய அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. 

அரசியல் துறை சார்ந்தோர் மற்றும் ஜனாதிபதி அவர்களின் நலன் விரும்பிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW