ஜனாதிபதி தஜிகிஸ்தான் தேசிய தொல்பொருள் நிலையத்திற்கு விஜயம்

ஜனாதிபதி தஜிகிஸ்தான் தேசிய தொல்பொருள் நிலையத்திற்கு விஜயம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) முற்பகல் தஜிகிஸ்தான் தேசிய தொல்பொருள் நிலையத்திற்கும் விஜயம் செய்தார்.

இந்த தொல்பொருள் நிலையத்தில் பல சிறிய மற்றும் பெரிய கண்காட்சி கூடங்கள் அமைய பெற்றுள்ளதுடன், இயற்கை, பண்டைய, மத்தியகால, நவீனகால வரலாறுகள் மற்றும் கலை அம்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் நிலையத்தின் வடிவமைப்பை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த புத்தர் சிலையையும் பார்வையிட்டார்.

அத்தோடு விசேட விருந்தினர்களுக்கான கையேட்டில் குறிப்பொன்றை பதிவு செய்தார்.

Share This Post

NEW