துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்

துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் பங்குபற்றுவதற்காகதஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) முற்பகல் துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

மின்சார நிலைய வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக அமோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், தஜிகிஸ்தான் நாட்டின் உப பிரதமர் ஜனாதிபதி அவர்களை வரவேற்றார்.

நுரெக் நீர்மின்சார நிலையம் தஜிகிஸ்தானின் பிரதான மின்சக்தி நிலையமாகும் என்பதுடன், அதிக குளிர் காலத்தில் பெருமளவு தேவைப்படும் மின்சக்தி தேவையை நிறைவேற்றுவதுடன், ஏனைய காலங்களில் மேலதிக மின்சக்தியை ஏற்றுமதி செய்யவும் தஜிகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சக்தி நிலைய நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து தஜிகிஸ்தானின் வெளிநாட்டு வருமானத்தில் மின்சார ஏற்றுமதி முக்கிய இடம் வகிக்கின்றது.

மின்சக்தி நிலையத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுக்கு அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

Share This Post

NEW