“டெக்னோ ஸ்ரீ லங்கா 2019” அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

“டெக்னோ ஸ்ரீ லங்கா 2019” தேசிய பொறியியல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) முற்பகல் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை பொறியியல் சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சியே இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு பாரிய பொறியியல் தொழிநுட்ப கண்காட்சியாகும்.

“புதிய பொறியியல் விஞ்ஞானத்தினூடாக பேண்தகு இலங்கையை நோக்கி” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருட கண்காட்சி இன்று முதல் மூன்று தினங்கள் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் இடம்பெறும்.

கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.பல்லேவத்த, டெக்னோ ஸ்ரீ லங்கா 2019 கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபேகோன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

 

Share This Post

NEW