“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்

“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்

உலகவாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவினை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயமும் அங்குள்ள பெளத்த அமைப்புக்களும் ஒன்றிணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

அதன் முதலாவது நிகழ்ச்சி நேற்று (16) இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் தலைமையில் புத்தகயாவில் இடம்பெற்றது.

பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பக்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்வைக்கப்படவுள்ள முன்மொழிவு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் இந்நிகழ்வில் தெளிவூட்டப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அன்னதாக நிகழ்வும் இடம்பெற்றது.

உன்னத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவித்து, பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து பிக்குகளும் பக்தர்களும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மகாபோதி சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Share This Post

NEW