திவுல்தென ஞானிஸ்ஸர மகா நாயக்க தேரர் ஞாபகார்த்த கட்டிடம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு

திவுல்தென ஞானிஸ்ஸர மகா நாயக்க தேரர் ஞாபகார்த்த கட்டிடம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு

காலஞ்சென்ற திவுல்தென ஞானிஸ்ஸர மகா நாயக்க தேரரின் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட பாகொட திவுல்தென ஞானிஸ்ஸர மகா நாயக்க தேரரின் ஞாபகார்த்த கட்டிடம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.

நுகேகொட பாகொடை திவுல்தென ஞானிஸ்ஸர தேரர் மத்திய நிலையத்தின் தலைவர் சங்கைக்குரிய பண்டாரவெல நந்த தேரரின் நெறிப்படுத்தலில் உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் அன்பளிப்பில் சுமார் 45 மில்லியன் ரூபா செலவில் தொல்பொருள் நிலையம், நூலகம் என்பவற்றை கொண்டதாக இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், தொல்பொருள் நிலையத்தையும் பார்வையிட்டார்.

சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், சங்கைக்குரிய கலாநிதி கொடுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

Share This Post

NEW