நாடளாவிய ரீதியில் 75 விகாரைகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

நாடளாவிய ரீதியில் 75 விகாரைகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

நாடளாவிய ரீதியில் 75 விகாரைகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையர்கள் அனைவருக்கும் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் 10 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக நாட்டில் உள்ள அனைத்து விகாரைகளுக்கும் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் அரசாங்க காணிகளில் அமைந்துள்ள விகாரைகளுக்கு 355 காணி உறுதிகள் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மகாசங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 700 விகாரைகளுக்கான காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புறே விமலதம்ம அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததுடன், அமைச்சர் சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW