புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (07) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பொதுமக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்காத வகையில் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனைத்து தொழிற்சங்கங்களினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதனைத் தொடர்ந்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தி அவற்றுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்ற வகையில் தான் தலையீடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

Share This Post

NEW