ஜனாதிபதியின் ஐந்து ஆண்டுகால சேவைக்கு மகாசங்கத்தினர் பாராட்டு

ஜனாதிபதியின் ஐந்து ஆண்டுகால சேவைக்கு மகாசங்கத்தினர் பாராட்டு

நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அழித்துக்கொண்டிருந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து சமூகத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆற்றப்பட்ட உன்னத பணிக்காக மகாசங்கத்தினர் அவருக்கு ஆசிகலந்த பாராட்டுகளை தெரிவிப்பதாக வண. அளுத்கம பஞ்ஞாசார தேரர் தெரிவித்தார்.

அப்பாவி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வளித்து ஆன்மீகத்தால் போஷிக்கப்பட்டு அறமிகு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவும், புனித திரிபீடகத்தை பாதுகாப்பது உள்ளிட்ட பௌத்த சாசனத்தின் நிலைபேற்றை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் இன்று போன்றே என்றென்றும் போற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

வண. அளுத்கம பஞ்ஞாசார தேரரின் சிறப்புரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து பௌர்ணமி தினங்களிளும் பிரதான விகாரையொன்றை மையமாக கொண்டு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும் சதகம் யாத்ரா ஆன்மீக நிகழ்ச்சித் தொடரின் 56வது நிகழ்ச்சி இம்மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று (12) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையின் அரச மரம் முன்பாக இடம்பெற்றது.

இன்று காலை ஜனாதிபதி மாளிகையின் அரச மரத்திற்கு அருகில் வருகைத்தந்த ஜனாதிபதி அவர்கள், வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவை செவிமடுத்தார்.

ஜயந்தி சிறிசேன அம்மையார், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் அறநெறி பாடசாலை மாணவர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

 

Share This Post

NEW