பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 36 விகாரைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 36 விகாரைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தூர பிரதேசங்களில் உள்ள குறைந்த வசதிகளைக்கொண்ட விகாரைகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகம் முன்னெடுக்கும் பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் மேலும் 36 விகாரைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி விகாரைகளின் விகாராதிபதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தினூடாக குறைந்த வசதிகளைக்கொண்ட பெருமளவிலான விகாரைகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் பொறியியல் ஒத்துழைப்பையும் மனித வள பங்களிப்பையும் பெற்று இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதற்கமைவாக பல விகாரைகளில் அபிவிருத்தி பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

காணிப் பிரச்சினைகள் காணப்படும் விகாரைகளுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்குவதனூடாக அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

Share This Post

NEW