மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தின் ஸ்ரீ கௌதம புத்த மண்டபமும் பிக்குகளுக்கான தங்குமிட கட்டிடமும் ஜனாதிபதி தலைமையில் மகாசங்கத்தினரிடம் கையளிப்பு

மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தின் ஸ்ரீ கௌதம புத்த மண்டபமும் பிக்குகளுக்கான தங்குமிட கட்டிடமும் ஜனாதிபதி தலைமையில் மகாசங்கத்தினரிடம் கையளிப்பு

கொடகவெல மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கௌதம புத்த மண்டபம் மற்றும் சிரிசுகதவங்ச பிக்குகள் தங்குமிடத்தையும் மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றது.

ஸ்ரீ மகாபோதியின் கிளைகள் நாடளாவிய ரீதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வெஹெர விகாரைகளை நிர்மாணித்து நாட்டில் பௌத்த மதம் பரப்பப்பட்டதாகவும் அதற்கமைய ஸ்ரீ மகாபோதியின் முதலாவது கிளை இந்த புண்ணிய பூமியிலேயே நடப்பட்டதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

தற்போது மிக ரம்மியமான புனித பூமியாகக் காணப்படும் மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தில் நிலவிய குறைபாட்டினை நிவர்த்திக்கும் வகையிலேயே தியான நிலையத்தின் பொறுப்பாளர் வண.பாதகட சுமணதிஸ்ஸ நாயக்க தேரரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி அவர்களினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட நிதி அன்பளிப்பில் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து ஸ்ரீ கௌதம புத்தர் மண்டபத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள புத்த பெருமானின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி வழிபட்டதன் பின்னர் போதி மர வளாகத்தில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார்.

கிரிவெல்தெனிய புராண விகாரை, புதுலென ரஜமகா விகாரையின் விகாராதிபதி சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரிய மகா விகாரை பிரிவின் ஊவா, சபரகமுவ மாகாணங்களின் பிரதான சங்க நாயக்கர் வண.பாதகட விமலரத்னாபிதான நாயக்க தேரர் நிகழ்விற்கு தலைமை தாங்கியதுடன், வண.ஹவுபே சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் இராஜாங்க அமைச்சர் துனேஷ் கன்கந்த, சபரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW