பாரிய விவசாய முதலீட்டில் மேற்கொள்ளப்படும் மரவள்ளி செய்கை செயற்திட்டத்தின் ஆரம்பம் மற்றும் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுதல் ஜனாதிபதி தலைமையில்

பாரிய விவசாய முதலீட்டில் மேற்கொள்ளப்படும் மரவள்ளி செய்கை செயற்திட்டத்தின் ஆரம்பம் மற்றும் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுதல் ஜனாதிபதி தலைமையில்

40 மில்லியன் அமெரிக்கன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலாவது பாரிய பசுமை முதலீட்டு திட்டமான கிராமிய மரவள்ளி உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் புதிய செயற்திட்டத்தின் ஆரம்பமும் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுதலும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) பிற்பகல் பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்றது.

கிராமிய தொழில்முயற்சி மேம்பாட்டில் புதியதோர் யுகத்தினை ஆரம்பிக்கும் வகையில் கிராமசக்தி மக்கள் இயக்கமும் ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து பாரம்பரிய விவசாய உற்பத்திகளை புதிய தோற்றத்தில் வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வயல் நிலங்களை வளமாக்கும் 37,500 ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர்ச்செய்கை, நாடு முழுவதுமுள்ள 20,000 விவசாயிகளின் அறுவடைக்கான சந்தைவாய்ப்பு, நவீன தொழிநுட்ப உபகரணங்களுடன் கூடிய உற்பத்தி ஆலை ஆகியன இச்செயற்திட்டத்தினூடாக  நாட்டுக்கு கிடைக்கப்பெறுவதுடன், பெருமளவிலான அந்நிய செலாவணியையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இத்திட்டத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

புதிய தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மற்றும் ஸ்டார்ஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் என்ரியாஸ் வைக் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW