அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆறு பேர் கொண்ட குழு நியமனம்

அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆறு பேர் கொண்ட குழு நியமனம்

விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான இறுதி தினம் டிசம்பர் 18

அரசாங்க நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகம் ஆறு தொழில் வல்லுநர்களை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

முன்னாள் அமைச்சரவையின் செயலாளரும் அரச துறை பற்றிய விரிவான அனுபவங்களைக் கொண்டவருமான சிரேஷ்ட அரச அதிகாரி சுமித் அபேசிங்கவின் தலைமையிலான இக்குழுவில் பிரசன்ன ரத்நாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், கலாநிதி பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள தகைமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் தமது விருப்பத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பை 2019 டிசம்பர் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அவர்களுக்கு அறியத் தருகிறது.

 

 

Share This Post