உலக கண்டற்தாவர நினைவுதின வைபவம் ஜனாதிபதி தலைமையில்…….

உலக கண்டற்தாவர நினைவுதின வைபவம் ஜனாதிபதி தலைமையில்…….

 

இன்று அனுஷ்டிக்கப்படும் உலக கண்டற்தாவர தினத்தையொட்டி சிலாபம் பம்பலா எனும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட கண்டற்தாவர அரும்பொருட் காட்சியகத்தை திறந்து வைத்தல் மற்றும் இலங்கை கண்டற்தாவர பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (26) பிற்பகல் நடைபெற்றது.

2015ஆம் ஆண்டில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, ஐக்கிய அமெரிக்காவின் சீகொலொஜி நிறுவனம் மற்றும் இலங்கை சிறு கடற்றொழில் சம்மேளனம் (சுதீச) ஆகியன இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களில் காணப்படும் கண்டற்தாவர சூழலைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.

சீகொலொஜி – சுதீச கண்டற்தாவர அரும்பொருட் காட்சியகத்திற்கான நிதி அனுசரணை மற்றும் பின்னாய்வு ஆகியன அமெரிக்காவின் சீகொலொஜி நிறுவனத்தினால் வழங்கப்படுவதுடன் இலங்கை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து அரச அனுசரணை வழங்குகிறது.

நினைவுப் பேழையை திரைநீக்கம் செய்து வைத்ததன் பின்னர் அரும்பொருட் காட்சியகத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு நினைவுக் குறிப்பினைப் பதிவு செய்தார்.

ஜனாதிபதி அவர்கள் அரும்பொருட் காட்சியகத்தைப் பார்வையிட்டதன் பின்னர் கண்டற்தாவர பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது சிறு கடற்றொழில் சம்மேளனத்தின் பணிப்பாளர் கலாநிதி காமினி காரியவசம் அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் World First Mangrove Museum எனும் நூல் கையளிக்கப்பட்டது.

சீகொலொஜி நிறுவனத்தின் நிர்வாக சபையினர் ஜனாதிபதி அவர்களுடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, சீகொலொஜி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் Paul Alan Sox உள்ளிட்ட சிலரும் இலங்கை சிறு கடற்றொழில் சம்ளேனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை யுனேஸ்கோ தேசிய ஆணைக்குழுவின் பிரதம செயலாளர் தம்மிகா விஜேசிங்க உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

 

 

Share This Post

NEW