இலங்கை அணி உலகக்கோப்பையை வென்று இருபது வருடங்கள் நிறைவு

இலங்கை அணி உலகக்கோப்பையை வென்று இருபது வருடங்கள் நிறைவு

ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வு

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று 20 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட கண்காட்சி கிரிக்கட் போட்டியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (19) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கொழும்பு சீ சீ சீ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் மற்றும் புதிய கிரிக்கட் வீரர்கள் பலரையும் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட அணியின் தலைவர்கள் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையிலான கிரிக்கட் அணியும் முன்னாள் கிரிக்கட் வீரர் ரோய் டயசின் தலைமையிலான கிரிக்கட் அணிக்குமிடையே நடைபெற்ற கிரிக்கட் போட்டியையும் ஜனாதிபதி கண்டுகளித்ததோடு, அவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இலங்கை கிரிக்கட் அணியில் ஆரம்பம் முதல் விளையாடிய முன்னணி கிரிக்கட் வீரர்களைப் பலப்படுத்தும்வகையில் அவர்களுக்கும் ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.
இன்றைய தினம் நடைபெறும் போட்டியின் மூலம் கிடைக்கப்பெற்ற முழு வருமானத்தையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிறுநீரக நோயாளிகளுக்கு உதவுவதற்காக அன்பளிப்புச்செய்யும் காசோலையை முன்னாள் கிரிக்கட் வீரர் ரொசான் மஹாநாம ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இலங்கை கிரிக்கட் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, சிங்கர் ஸ்ரீ லங்காவின் தலைவர் ஹேமக்க அமரசூரிய, முன்னாள் கிரிக்கட் தலைவர் ஆனா புஞ்சிஹேவா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

Share This Post

NEW