தற்கால தலைவர்கள் பலரிடம் காணப்படாத நாட்டைப் பற்றிய தெளிவான இலக்கு ஜனாதிபதியிடம் உள்ளதாக வண.நெதகமுவே விஜயமைத்ரி நாயக்க தேரர் தெரிவிப்பு

தற்கால தலைவர்கள் பலரிடம் காணப்படாத நாட்டைப் பற்றிய தெளிவான இலக்கு ஜனாதிபதியிடம் உள்ளதாக வண.நெதகமுவே விஜயமைத்ரி நாயக்க தேரர் தெரிவிப்பு

தற்கால தலைவர்கள் பலரிடம் காணப்படாத நாட்டைப் பற்றிய தெளிவான இலக்கு தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் காணப்படுவதாகவும் நாட்டின் அபிவிருத்திக்கான தொலைநோக்கு சிந்தனை மற்றும் திடமாக செயற்படும் பண்பு அவரிடம் உள்ளதாக ராமஞ்ஞ நிக்காயவின் வண.நெதகமுவே விஜயமைத்ரி நாயக்க தேரர் தெரிவித்தார். 

எதிர்க்கட்சியினதும் அரசாங்கத்தினதும் ஒத்துழைப்பின்றி நாட்டின் அபிவிருத்திக்காக தனியொருவராக அவரால் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள செயற்பாடுகளை எவராலும் மறுக்க முடியாது என்பதோடு அனைவரது ஒத்துழைப்புடனும் அச்செயற்பாடுகள் பலப்படுத்தப்படுமாயின் சிறந்த நாட்டை பற்றிய தெளிவான எதிர்பார்ப்பை மக்கள் கொள்ள முடியும் என தேரர் அவர்கள் தெரிவித்தார்.

உடுகம்பல, வீதியவத்த நீக்ரோதாராம புராண விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் ஆசியுரை ஆற்றும்போதே தேரர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டின் பௌத்த சாசனத்திற்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்காகவும் நிறைவேற்றிய செயற்பணிகள் எந்தவொரு அரச தலைவராலும் இதுவரை நிறைவேற்றப்படாத முக்கியமான செயற்பாடுகளாகுமென தேரர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் உடுகம்பல, வீதியவத்த நீக்ரோதாராம புராண விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து புதிய தூபியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதற்கு மலரஞ்சலி செலுத்தினார்.  

இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சிறந்த சமூகமொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் கிராமிய விகாரைகளை பலப்படுத்துதல், மகாசங்கத்தினரை போஷித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன எனத் தெரிவித்தார்.

சிறந்த ஒழுக்கப் பண்புடைய சமூகமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள எமது நாடு பௌத்த கலாசாரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விகாராதிபதி வண.தெப்பனாவே சுனீத நாயக்க தேரருக்கு பரிசொன்றினை ஜனாதிபதி அவர்கள் வழங்கியதோடு, தேரர் அவர்களும் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

ராமஞ்ஞ மகா நிக்காயவின் அநுநாயக்கர் வண.வராகொட பேமரதன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, எட்வர்ட் குணசேகர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்திரளான பக்த பெருமக்களும் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW