வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு….

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு….

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் அரச வைபவம் வெசாக் பௌர்ணமி தினமான நாளை மு.ப 10.00 மணிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.

சிறு குற்றங்களை புரிந்தமைக்காக சிறையிலடைக்கப்பட்டுள்ள 762 சிறைக்கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதோடு, இவர்களுள் 26 பேர் பெண் கைதிகளாவர்.

அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் இவ்வாறு சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதுடன், சிறைச்சாலை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான சிறைக்கைதிகள் இவ்வாறு ஒரே தடவையில் விடுதலை செய்யப்படுகின்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

NEW