வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேயின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேயின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேயின் தந்தையாரான மறைந்த அல்போன்ஸ் பெர்ணான்டோபுள்ளே அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை, வெலிஹேன பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (12) நண்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரின் குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோரும் இதன்போது ஜனாதிபதி அவர்களுடன் இணைந்துகொண்டனர்.

Share This Post

NEW