மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் மொஹமட் சோலிக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சீஷெல்ஸுக்கான இரண்டுநாள் அரச முறை விஜயத்தினை நிறைவு செய்து, இன்று முற்பகல் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்த வேளையில் இப்ராஹிம் மொஹமட் சோலியின் சிங்கப்பூருக்கான விஜயத்தின் இடை நடுவிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்கள், இதன்போது இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Share This Post

NEW