சிறுநீரக நோய்த் தடுப்புக்காக ஆற்றும் பெரும்பணியைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விசேட சர்வதேச விருது

சிறுநீரக நோய்த் தடுப்புக்காக ஆற்றும் பெரும்பணியைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விசேட சர்வதேச விருது

இலங்கையில் சிறுநீரக நோய் தடுப்புக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றும் பெரும் பணியைப் பாராட்டி சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பு ஜனாதிபதி அவர்களுக்கு விசேட விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இன்று (19) பிற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பின் தலைவி பேராசிரியர் அடீரா லெவின் அம்மையாரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள ஆதரவற்ற சிறுநீரக நோயாளர்களின் நலன்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்திட்டத்துக்கு இந்த விருது பெரும் பலமாகும் என்பதனால் அனைத்து இலங்கை மக்கள் சார்பிலும் சிறுநீரக நோய் தொடர்பான மருத்துவ நிபுணர்களின் சர்வதேச அமைப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஆதரவற்ற ஏழை மக்கள் இரண்டு தசாப்தங்களுக்கு கூடுதலான காலமாக முகங்கொடுத்துள்ள இந்த அனர்த்தத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அப்பயணத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையின் சிறுநீரக நோய்த்தடுப்புக்காக சர்வதேச ரீதியில் நல்கிவரும் பங்களிப்பை பாராட்டி பேராசிரியர் அடீரா லெவின் அம்மையாருக்கும் சிறுநீரக நோய்தடுப்புக்காக மேற்கொண்டுவரும் பங்களிப்பைப்பை பாராட்டி விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேக்கர, வைத்தியர் ஜோர்ஜ் ஏப்ரஹம், சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல ஆகியோருக்கும் ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்களும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ அபேகோன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW