“சதஹம் யாத்ரா”  சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில்

“சதஹம் யாத்ரா”  சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில்

அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இலங்கையின் பிரதான விகாரை ஒன்றை மையமாகக்கொண்டு இடம்பெறும் “சதஹம் யாத்ரா” சமய உரை தொடரின் 54ஆவது நிகழ்வு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றலுடன் மாத்தறை, அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜேத்தவன ரஜமகா விகாரையில் இடம்பெற்றது.

இன்று முற்பகல்  விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், விகாரதிபதி சங்கைக்குரிய அகலகட  ரத்தனபால தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

சங்கைக்குரிய கம்பஹா மகாநாம தேரர் சமய உரை நிகழ்த்தினார். அந்த சமய உரையை ஜனாதிபதி அவர்களும் செவிமடுத்தார்.

வட மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பிரதேசவாசிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW