“வளமான தேசத்தின் வாவிப் புரட்சி” எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்

“வளமான தேசத்தின் வாவிப் புரட்சி” எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்

“வளமான தேசத்தின் வாவிப்புரட்சி” எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் குருணாகல் மேற்கு பண்டுவஸ்நுவரவில் உள்ள கொடகிம்புலாகட அணைக்கட்டுக்கு அருகாமையில் நாளை (12) பிற்பகல் இடம்பெறும்.

3000 ஏக்கர் வயற் காணிகளில் அறுவடையை மேற்கொள்வதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதுடன் இணைந்ததாக 21 வாவிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் இந்த செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

எல்லங்கா குளக் கட்டமைப்புடன் இணைந்த 2400 கிராமிய வாவிகளை புனரமைக்கும் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் 2018.09.21ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அநுராதபுரம் மாவட்டத்தின் மகாவிலச்சிய நபடகஸ்திகிலிய வாவிக்கருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எல்லங்கா திட்டம் என்பது உலர் வலயத்தில் தற்போது செயலிழந்து காணப்படும் எல்லங்கா குளக் கட்டமைப்பினை மீண்டும் புனரமைத்து அப்பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கான நீரை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

இலங்கையில் கிராமங்களை மையப்படுத்திய நீர்ப்பாசன தொழிநுட்பமான கிராமிய எல்லங்கா குளக் கட்டமைப்பு ஐநா உணவு மற்றும் விவசாய தாபனத்தினாலும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த விவசாய மரபுரிமையாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கைக்கே தனித்துவமான இந்த பாரம்பரிய விவசாய தொழிநுட்ப முறைமையின் மூலம் நாட்டின் விவசாயத்துறையிலும் விவசாய பொருளாதாரத்திலும் எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

Share This Post

NEW