ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துதல் மற்றும் கடவத்தை மகமாயா மகளிர் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்குடன்கூடிய புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துதல் மற்றும் கடவத்தை மகமாயா மகளிர் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்குடன்கூடிய புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

கம்பஹா மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றது.

சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கராவின் இலவசக் கல்விக் கொள்கைக்கேற்ப உருவாக்கப்பட்ட 11வது மத்திய கல்லூரியான ஹேனேகம மத்திய கல்லூரி 1944ஆம் ஆண்டு 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக்கு பல்வேறு சிறந்த பிரஜைகளை வழங்கி ஆயிரக் கணக்கான மாணவர்களின் கல்விக்கு வழிவகுத்த புகழ்பெற்ற பாடசாலையாக இப் பாடசாலை விளங்குகிறது.

இன்று முற்பகல் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதைக் குறிக்கும்  நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிபர் விஜய சத்தியஜித் குலரத்ன மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் மகர, கடவத்தை மகமாயா மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்குடன் கூடிய புதிய கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் இன்று  மாணவிகளிடம் கையளித்தார்.

இன்று முற்பகல் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கல்வியிலும் விளையாட்டிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கடவத்த மகமாயா கல்லூரியில் நீண்டகாலமாக இருந்துவந்த குறையை நிவர்த்திக்கும் வகையில் இந்த உள்ளக விளையாட்டரங்குடன் கூடிய இரண்டுமாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது.

அப்போது ஜனாதிபதி அவர்கள், மாணவிகளுக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப 06 மாத காலப் பகுதியில் இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மிக விரைவாக விளையாட்டரங்குடன் கூடிய புதிய கட்டிடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்காக குறித்து மாணவிகள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஜிம்னாஸ்டிக் அணியினர் உள்ளிட்ட கல்லூரியின் மாணவிகளினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

கல்லூரியின் அதிபர் புஷ்பிக்கா பந்துவங்ச ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

 

Share This Post

NEW