Month: ஜூலை 2015

புனர் நிர்மாணம் செய்யப்பட்ட அபயகிரி தூபியில் ஜனாதிபதி வழிபாடு

புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க அபயகிரி சைத்தியவில் முதலாவது தூபி பூஜை வழிபாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) பிற்பகல் நடைபெற்றது. எசல பௌர்ணமி தினமான இன்று ஜனாதிபதி அவர்களினால் முதலாவது பூஜை செய்யப்பட்டதோடு, உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களின் புன்னிய ஸ்தலமாக வரலாற்று முக்கியத்துவமிக்க புன்னிய பூமி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக இங்கு புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 345 அடி…

கலாமின் மறைவுக்கு ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியுடன் ஜனாதிபதியின் விசேட தூதுவர் இந்தியா பயணம்

கலாநிதி அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடுத்துள்ள அனுதாபச் செய்தியை இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்களிடம் கையளிக்கவென அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று பிற்பகல் இந்தியா பயணமானார். இதேநேரம் முன்னால் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் அவர்களின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது அனுதாபச் செய்தியை பதிவுசெய்தார். இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள இந்திய உயரிஸ்தானிர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப்…

அப்துல் கலாமின் இழப்பு இந்தியாவுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும் – ஜனாதிபதி

கலாநிதி அப்துல் கலாம் திடநம்பிக்கையுடையவராகவும் தளராத மனம் படைத்தவராகவும் இருந்தார் என்பதோடு, அவர் உலகின் ஒரு மிகப்பெரும் அரசியல் மேதையுமாவார். அவரது இழப்பு இந்தியாவுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி கலாநிதி ஏ பி ஜே அப்துல் கலாமின் மறைவையொட்டி ஜனாதிபதி விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் இந்த மிகப்பெரும் ஆளுமையுடன்…

கட்சி கட்டுப்பாடுகளை மீறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

கட்சி கட்டுப்பாடுகளை மீறி பொதுத் தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ராஜித சேனாரத்ன, எஸ்.பி.நாவின்ன, எம். கே. டி. எஸ்.குணவர்தன, அர்ஜூன ரணதுங்க, ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்றவகையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதரிகாரங்களுக்கேற்ப கட்சியின் சட்டதிட்டங்ளை மீறி செயற்பட்ட இந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக இந்த…

போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணையுங்கள் –  தென்னாசியத் தலைவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நேற்று மாலே தலைநகரத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி, நேற்று மாலை மாலைத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார் நேற்று மாலை மலைத்தீவு ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்ரிபால…

ஆசிய பாடசாலை சதுரங்க போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

19 ஆசிய நாடுகளின் பங்குபற்றுகையுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற 11வது ஆசிய பாடசாலை சதுரங்க போட்டியில் பதக்கங்களை வென்று, இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றுக்கொண்டனர். இப்போட்டியில் குருனாகலை மலிய தேவ கல்ல}ரியின் ஹர்சன திலகரத்ன என்ற மாணவனும் நாவலை ஜனாதிபதி கல்லூரியின் தேவினி பெர்ணாந்து என்ற மாணவியும் வெள்ளிப் பதக்கங்களையும் மிளாகிரிய சென் போல் மகளிர் கல்லூரியின் ஏசா ஜலில் என்ற மாணவி வெண்கல பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இம் மாணவர்கள் இன்று (23) காலை…

NEW