Month: செப்டம்பர் 2015

நிலையான அபிவிருத்தி என்ற மாளிகையை சுய கட்டுப்பாடு, நேர்மை  என்ற அடித்தளத்தில் கட்டியெழுப்புங்கள் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்தல்

நிலையான அபிவிருத்தி என்ற மாளிகை சுய கட்டுப்பாடு, நேர்மை  என்ற அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இது தனிப்பட்ட, சமூக, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுமானால் இது மனித இனத்துக்கான ஒரு மிகப்பெரும் முன்னேற்றமாக அமையும்  என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “தேசிய தலைவர்களான நாம் எதிர்காலத்தில் உரிய செயற்திட்டங்களை வடிவமைக்கும்போது இந்த சுயகட்டுப்பாடு மற்றும் நேர்மை என்ற அடிப்படையிலான அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டுமென நான் முன்மொழிகிறேன்” என்றும் ஜனாதிபதி…

ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்குமான ஜனாதிபதியின் அர்ப்பணத்திற்கு ஒபாமா பாராட்டு

இலங்கையில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் அர்ப்பணத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (28) அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின்கீழ் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி ஒபாமா திருப்தி வெளியிட்டுள்ளார். நாட்டில் எதிர்காலத்தில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தான் உறுதியுடன்…

ஐ நா அமைதிகாக்கும் பணிக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணத்திற்கு இலங்கை உறுதியளிப்பு

ஐ நா அமைதிகாக்கும் பணிக்கு தனது தொடர்ச்சியான அர்ப்பணத்தை உறுதிப்படுத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஐ நா அமைதிகாக்கும் படையின் காரணமாக இன்று உலகம் பாதுகாப்பாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் இப்பணியில் இருந்தபோது தங்களது உயிர்களைத் தியாகம் செய்த நூற்றுக்கனக்கான அமைதிகாக்கும் பணியாளர்களை நினைவுகூர்ந்து நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைச் செலுத்துவதோடு, அவர்களது பணிகளை அங்கீகரித்து பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார். இன்று (28) ஐ நா தலைமையகத்தில்…

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அவர்களுக்குமிடையே நேற்று (27) பிற்பகல் நியுயோர்க் நகரில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.   அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நியுயோர்க் நகரில்  தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகைதந்து ஜனாதிபதியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.   இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம், சனநாயகம் மனித உரிமைகளைப் பலப்படுத்துவோம் – ஜனாதிபதி

புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, பினர நோன்மதி தினமான நேற்று (27) நியுயோர்க் நகரில் உள்ள பௌத்த விஹாரைக்குச் சென்று சமய அனுஷ;டானங்களில் ஈடுபட்டதன் பின்னர், அங்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களிடம் உரையாற்றும்போNது மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி…

பால் சமநிலை மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்காக நாம் அர்ப்பணத்துடன் செயற்பட்டு வருகிறோம் – ஜனாதிபதி

பெண்கள் உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணத்துடனும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நியுயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று (27) நடைபெற்ற பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான சர்வதேச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். செயற்பாட்டுக்கான பீஜிங் மன்ற பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது முதல் இலங்கை பால் சமநிலையை அடைந்துகொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். செயற்பாட்டுக்கான…

சூழல் நட்புடைய நாகரீகத்தின் முன்னோடி என்ற வகையில் இலங்கை நிலையான அபிவிருத்தி  இலக்குகளை அடைந்துகொள்ள உறுதியுடன் உழைக்கும் – ஜனாதிபதி

இலக்குகளை அடைந்துகொள்ள உறுதியுடன் உழைக்கும் – ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்குப் பிந்திய நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு 21ஆம் நூற்றாண்டில் எழுந்துவரும் ஒரு சூழல் நட்புடைய நாகரீகத்தின் முன்னோடி என்ற வகையில் இலங்கை அர்ப்பணத்துடன் செயற்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நியுயோர்க் நகரில் இன்று (27) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரின் நிலையான அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில்…

பாக்கிஸ்தான் மோல்ட்டா நாட்டு பிரதமர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்குமிடையே இன்று (26) பிற்பகல் ஐநா. தலைமை அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, இந்த இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. மிக அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்கள் ஜனாதிபதியிடம்…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலகின் நம்பிக்கையை   வென்றுள்ளார்- பான் கி மூன்

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றி கொண்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையின் எதிர்கால வெற்றிப் பயணத்திற்கு சர்வதேசத்தின் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூ யோர்க்சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) ஐ.நா.தலைமையகத்தில் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அல்லாஹ்வின் பெயரால் உயர்ந்த தியாகங்களைச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஹஜ் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்களின் மிகவும் முக்கியமான வருடாந்த நிகழ்வாகும். பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் உடைய இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வை வணங்கும் காட்சி ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலங்கை…

NEW