Month: அக்டோபர் 2015

சிறுவர்களுக்கு ஒரு அழகிய உலகை கட்டியெழுப்புவதற்காக சிபில் வெத்தசிங்க அர்ப்பணத்துடன் செயற்பட்டார்

ஒரு எழுத்தாளர் என்றவகையில் பிள்ளைகளின் அழகிய உலகை கட்டியெழுப்புவதற்கு பெரும் பங்களிப்பு செய்த திருமதி சிபில் வெத்தசிங்கவுக்கு எமது கௌரவம் என்றும் உரித்தாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (31) கொழும்பில் உள்ள எம்.டி.குணசேன கேட்போர்கூடத்தில் நடைபெற்ற திருமதி.சிபில் வெத்தசிங்கவின் 88வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். பிள்ளைகளின் உலகை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு புதிய பயணத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ள இச்சந்தர்ப்பத்தில், எழுத்துக்களின்…

சிறி ஜயவர்தனபுர கோட்டே நிர்வாக நகரின் போக்குவரத்து முறைமைகளை செயற்திறமாக முன்னெடுக்கும் வகையில் பொல்துவ உடுமுல்ல வீதி நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (31) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 316 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட உள்ள இப்புதிய வீதிக்கருத்திட்டம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலில் பெருநகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து மேற்கொள்ளவுள்ளன. அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன,…

ஒரு நகரத்தின் அழகு அதன் குடியிருப்பாளர்களின் உள்ளங்களிலும் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

நவீன நகர எண்ணக்கருக்களுக்கு அமைய கட்டியெழுப்ப்ப்படும் ஒரு நகரத்தின் அழகு அதன் குடியிருப்பாளர்களின் உள்ளங்களிலும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அப்படியில்லாதபோது அத்தகைய நகரங்களின் ஊடாக மக்களின் விருப்பங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள அபேகமவில் இன்று (31) இடம்பெற்ற சர்வதேச நகரத் திட்டமிடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில்கூட நகரங்களில் அதிகரித்த சனத்தொகை ஒரு…

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புத்தி ஜீவிகளின் ஆலோசனை அரசாங்கத்திற்கு தேவை – ஜனாதிபதி

நாட்டை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு புத்தி ஜீவிகளின் ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (30) இலங்கை வங்கியியல் கற்கைகள் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலங்கை பொருளியலாளர் சங்கத்தின் 30வது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பொருளியலாளர்கள் சங்கத்தின் 30 வருட சேவையை பாராட்டிய ஜனாதிபதி, இச்சங்கம் எதிர்காலத்திலும் அரசாங்கத்துடன் நெருங்கிப் பணியாற்றும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார,…

பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவை தெரிவுக்குழு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலையில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இப்பொருளாதார முகாமைத்துவம் பற்றிய தெரிவுக்குழுவின் கூட்டம் இனிவரும் காலங்களில் மாதாந்தம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களின் வருமான மார்க்கங்களை அதிகரித்தல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, நாட்டின் வரிக்கொள்கை மற்றும் பல்வேறு துறைகளின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படும்…

என்னுடைய ஆட்சியில் நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்பேன் – ஜனாதிபதி.

சுதந்திரத்தின் பின் இந்நாட்டில் உருவாகிய அரச தலைவர்கள் நாட்டினதும் நாட்டு மக்களினதும் தேவையின் நிமித்தம் ஒவ்வொரு யுகத்திலும் முக்கியத்துவம்வாய்ந்த பொறுப்புக்களை மேற்கொண்டதைப் போன்றே தனது ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பினை தான் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பஸ்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களுக்காக “ரண்பிம” 4000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்காக இன்று (30) முற்பகல் மாத்தறை ஊறுபொக்க நகரத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன…

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வெற்றிக்காக சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு தலைமை தாங்குவேன் – ஜனாதிபதி

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வெற்றிக்காக சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு தலைமை தாங்குவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். தான் ஒருபோதும் கட்சி தோல்வியுறுவதைக் காண விரும்பவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒரு நிலையான கட்சி எனவும் கடந்த இரண்டு தேர்தல்களின்போது இக்கட்சி தோல்;வியடைந்ததை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படல் வேண்டுமெனவும் நாடளாவிய ரீதியில் இப்பயணத்தை முன்னெடுக்கும் ஒரு ஆரம்ப பயணம் இன்று…

ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60ஆவது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்டுள்ள விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதைக் குறிக்குமுகமாகவும் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையிலான சமய உறவுகளைப் பலப்படுத்தும் முகமாகவும் மஹியங்கனை ரஜமஹாவிகாரையிலிருந்து புனித தந்தம் எடுத்துச்செல்லப்பட்டு தாய்லாந்து புத்தமொந்தோனில் காட்சிப்படுத்தப்பவுள்ளது. இந்த நிகழ்வை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள்…

ஜெனீவா பிரேரணைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு   ஜனாதிபதி சமயத் தலைவர்களுடன் சந்திப்பு

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கையின்மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மற்றும் அதன் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் மதத் தலைவர்களுக்குமிடையிலான ஒரு விசேட சந்திப்பு நேற்று (29) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அண்மையில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாகவும் இங்கு ஜனாதிபதி அவர்கள் மதத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். தற்போதுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்றை நியமிப்பதற்கு இதன்போது ஜனாதிபதி அவர்கள்…

சகல பிள்ளைகளுக்குமான இலவசக்கல்வி உரிமையை அரசாங்கம் பாதுகாக்கும் – ஜனாதிபதி.

கல்வித்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சகல பிள்ளைகளுக்குமான இலவசக்கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நுகேகொட சமுத்திரா தேவி மகளிர் வித்தியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எல்ரீரீஈ. பயங்கரவாதம் மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த…

NEW