Month: நவம்பர் 2015

அபிவிருத்தி அடைந்த நாடுகள் பூகோள பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது – ஜனாதிபதி

வரலாற்று ரீதியான பொறுப்பினை கருத்திற் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் பூகோள ரீதியான பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுவான கடமைகள் தொடர்பான எண்ணக்கருவினை பின்பற்றும் தேவை எமக்கு இருந்தபோதும் இந்த நூற்றாண்டில் வெப்பத்தின் வளர்ச்சியானது இரண்டு பாகை செல்ஸியசிற்கு குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக எம்மிடம் பல்வேறு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆற்றல் நம்மிடம் காணப்படல் வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று…

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி

நாட்டை வெகுவாக நேசிக்கும் தான், நாட்டினது தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி வலியுறுத்தினார். பிரான்சில் வாழும் இலங்கையர்களுடன் நேற்று (29) இரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதுபற்றி வலியுறுத்தினார். பிரான்சில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பின்போது அந்நாட்டில் வசிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக்க ஹெல உருமய ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். சர்வதேச ரீதியாக…

ஐ நா காலநிலை மாற்றங்கள் மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாடு இன்று (30) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் சுமார் 3.00 மணிக்கு உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 150 இற்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் இணைந்துள்ளதுடன், 4 தசாப்தங்களின் பின்னர் இவ்வாறு பெருந்தொகையான அரச தலைவர்கள் பிரான்சில் ஒன்றுகூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னரும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி…

இலங்கை புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து அவுஸ்திரேலியா மற்றும் கனடா நாட்டுப் பிரதமர்கள் பாராட்டு

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி நாட்டை பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்லும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களை அவுஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளின் பிரதமர்கள் பாராட்டியுள்ளனர். பொதுநலவாய அரச தலைவர்கள்  மாநாட்டில் பங்குபற்றுவதற்காக மோல்டா நாட்டுக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட அவுஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளின் பிரதமர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன் புல் அவர்கள் நல்லிணக்கம்…

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி பிரான்ஸ் பயணம்

மோல்டா நாட்டில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு நாளை (நவம்பர் 29) பயணமாகவுள்ளார். இந்த மாநாடு ஆனது பிரான்ஸின் Le Bourget இல் 2015 நவம்பர் 30ம் திகதி முதல் டிசம்பர் 11ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இது பங்குதாரர்களின் 21வது மாநாடாகும். அதாவது காலநிலை தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட…

ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பிரித்தானியா பிரதமர் கமரூன் பாராட்டு> இலங்கைக்கு மேலும் பல உதவிகள்

ஜனாநாயகம்> மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை இலங்கையில் மேலும் வலுப்படுத்த கடந்த 10 மாதங்களாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவற்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த கூடுதலான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் கமரூன் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பானது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் அமர்வுகளுக்கிடையில் நேற்று…

பொதுவான பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கின்றன, செல்வ பலம் அல்ல – பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி

உறுப்பு நாடுகளின் பலம் அல்லது செல்வளங்கள் அன்றி பொதுப் பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கின்றன என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.   பொதுநலவாய நாடுகளின் செல்வாக்கு எமது எல்லா உறுப்பினர்களினதும் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்ட பெரிதும் உதவியுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.   மோல்டாவில் இன்று (27) இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.   பொதுநலவாய அமைப்பு 2 பில்லியனுக்கும்…

ஜனாதிபதி மோல்டா சென்றடைந்தார்

இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மோல்டா பிர்குவில் உள்ள போட்ஸ் சென் ஏஞ்சலோவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இன்று (26) மாலை மோல்டா சென்றடைந்தார். ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் இன்னும் பல அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர். மோல்டா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி அவர்களை மோல்டா நாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.…

இலங்கை ஜனாதிபதியின் சேவைகளுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் பாராட்டு

பொதுநலவாய நாடுகளின் தலைவரான இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மிகப் பெறுமதியான ஒரு சேவையை செய்துள்ளார் என பொதுநலவாய செயலகத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி கமலேஷ் சர்மா தெரிவித்தார்.   வெலட்டாவில் உள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று (26) நடைபெற்ற மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் அவர்களுடன் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் பின்னரே இதனைத் தெரிவித்தார்.   பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த திரு.கமலேஷ் சர்மா, ஜனநாயகம், மனித…

ஜனாதிபதி மோல்டா பயணம்

2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) மோல்டா பயணமானார். நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மோல்டா நாட்டின் பிர்குவில் உள்ள போட் சென் எஞ்சலோவில் (Fort St. Angelo) நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் ஏற்கனவே…

NEW