Month: மார்ச் 2016

பொருளாதார திட்டத்தை வடிவமைப்பதில் துறைசார்ந்தவர்களினதும் அரசாங்க அதிகாரிகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட கலந்துரையாடல்

 2030ஆம் ஆண்டாகும்போது நிலையான அபிவிருத்தி மற்றும் கூடிய வருமானத்துடன் முன்னுதாரணமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் திருப்தியும் அமைதியும் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குதல் ஆகிய நோக்குடன் எதிர்கால பொருளாதார திட்டத்தை தயாரிப்பதில் துறைசார்ந்தவர்களினதும் அரசாங்க அலுவல்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் ஒரு விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. “இலங்கையின் பொருளாதாரமும் எதிர்கால பயணமும்“ என்ற கருப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில்…

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு ஜனாதிபதி தலைமையில்

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மகாவலி வலயங்களில் குடியிருப்பவர்களுக்கான காணி உறுதிகளை பெற்றுக்கொடுப்பதை துரிதப்படுத்தல், மகாவலி வலயங்களில் உள்ள விகாரைகளுக்கான நிரந்தர உறுதிகளை வழங்குதல், முறையற்ற வகையில் காணிகளை பயன்படுத்தி வருபவர்களுக்கு முறையான தீர்வுகளை வழங்குதல், வறட்சியின் காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை கையாளும் வகையில் மகாவலி நீரை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்…

நிதி ஒழுக்கம், நிதி முகாமைத்துவம் தொடர்பான பொறுப்புக்களை ஒரு வருடத்தில் செயலில் காட்டியுள்ளோம் – ஜனாதிபதி

ஜனாதிபதியாக ஒரு வருடம் கடமைப் புரிந்ததில் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பாக தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தாம் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். இலங்கை விமானச் சேவை பாரிய நஷ்டத்திற்கு முகம்கொடுத்திருப்பது கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள்…

அரசாங்கத்தை அமைப்பதும் அரசாங்கத்தை மாற்றுவதும் மக்கள் கருத்துக்களிலேயே உள்ளது – ஜனாதிபதி

அரசாங்கத்தை அமைப்பதும் அரசாங்கத்தை மாற்றுவதும் மக்களின் கருத்துக்களுக்கேற்பவேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுக்காக பணிசெய்த காரணத்தினால் மட்டும் எவரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். நாட்டுக்காகப் பணிசெய்தவர்கள் எப்போதும் தேர்தல்களில் வெற்றிபெறுவதாயின் சீ பி டி சில்வா போன்ற ஆளுமைகள் எப்போதும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒருபோதும் தாம் கண்டிராத ஒருவருக்கு தமது வாக்குகளை அளித்தே நாட்டுக்காக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்த சீ பி டி சில்வா அவர்களை…

வடமேல் மாகாண சுகாதார சேவையின் ‘சுவ விஸிஸ்டதா’ விருது விழா ஜனாதிபதி தலைமையில்..

வடமேல் மாகாணத்தில் சிறந்த வைத்தியசாலை, சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் சிறந்த சேவைகளை வழங்கிய வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஏனைய சேவைகள் உள்ளிட்ட பணிக்குழாமினர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கான விருதுகளும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. வடமேல் மாகாண சுகாதார நிறுவனங்கள் மற்றும் பணிக்குழாமினரிடையே போட்டித்தன்மையை ஊக்குவித்து அதனூடாக  மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட வடமேல் மாகாண “சுவ விசிஸ்டதா“ விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று…

உரிய முறையில் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகள் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லை – ஜனாதிபதி

இன்று அரசாங்க சேவையில் சிலர் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று ஆவணங்களில் கைச்சாத்திடுவதில் இருந்தும் விலகி இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றும் அதிகாரிகள் ஒருபோதும் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது எனக் குறிப்பிட்டார். மக்களுக்காக தமது கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு சார்பாக அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருக்கும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்ற வகையில் புதிய…

மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது – ஜனாதிபதி

மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்றவகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக்…

லாகூர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து பாகிஸ்தானின் லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பி வைத்த விசேட செய்தியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிடுகையில், சோகமான இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு பாகிஸ்தான் அரசாங்கத்துடனும் மக்களுடனும் ஒன்றிணைந்து சோகத்தில் பங்குகொள்வதாகத் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், காயமடைந்தவர்கள்…

ஜனாதிபதி ”புலு ரிட்ச்” கப்பலை பார்வையிட்டார்…

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான புலு ரிட்ச் (Blue Ridge) கப்பலை பார்வையிட்டார். கப்பலுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அமெரிக்க கடற்படையினரால் இராணுவ மரியாதைகளுடன் கௌரவமாக வரவேற்கப்பட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் புலு ரிட்ச் கப்பல் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல்…

நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான உண்மையான மாற்றங்களுக்கான அத்திவாரத்தை அமைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்- ஜனாதிபதி

நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதுடன், நிதியொழுக்கத்தைப் பின்பற்றியவாறு நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக நாம் மேற்கொண்டுவரும் செயற்திட்டங்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடிந்திருப்பதையிட்டும் நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான உண்மையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அத்திவாரத்தை நாம் அமைத்திருப்பதையிட்டும் உண்மையிலேயே மகிழ்ச்சியடையக் கூடிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம் என்பதை என்னால் கூறமுடியும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று (27) நாட்டின் ஒரு முன்னணி ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ள ஒரு விசேட…

NEW