Month: ஆகஸ்ட் 2016

முன்னைய ஆட்சியாளர்களின் அநீதிகள் தொடர்பாக குறைபட்டுக்கொண்டவர்களே இன்று அவர்களுடன் அணி சேர்ந்துள்ளனர் – ஜனாதிபதி

முன்னைய ஆட்சியிலும் கட்சியிலும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக தம்மிடம் மனக்குறைகளை வெளிப்படுத்தியவர்களே இன்று அத்தகைய தொந்தரவுகளைக் கொடுத்தவர்களுடன் இணைந்து புதியதொரு சக்தியை உருவாக்க முயற்சித்துவருவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நேற்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் காலம்சென்ற ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்களின் உருவத்தையொத்த மெழுகினாலான உருவச்சிலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். திரு.ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவர்கள் நாட்டுக்கும்…

பிழையான தகவல்களை சமூகத்திற்கு வழங்கி சமூகத்தை பிழையாக வழிநடாத்த எடுக்கப்படும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

குருநாகல் – தம்புள்ளை வீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக தற்காலிகமாக அகற்றப்பட்டிருக்கும் குருநாகல் நகருக்கு அண்மையில் இருந்த படையினரது நினைவுத்தூபியை ஏற்கனவே இருந்ததைப் பார்க்கிலும் மிகச்சிறப்பான முறையில் மீண்டும் அந்த இடத்திலேயே மிக விரைவில் நிர்மாணிக்குமாறு தான் பாதுகாப்புச் செயலாளருக்கும் இராணுவத்தினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இராணுவத்தினரது நினைவுத்தூபியை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மேற்கொள்ளப்பட்டுவரும் போலிப்பிரசாரம் முற்றிலும் பொய்யானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பிழையான தகவல்களை…

2017 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்படும் –  ஜனாதிபதி

2017 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்படுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இது தொடர்பான ஒரு முன்மொழிவு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (29) பிற்பகல்  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்துறை, தனியார்த்துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்த ஒரு விரிவான நிகழ்ச்சித்திட்டத்தினூடாக இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

அவுஸ்திரேலிய இணையத்தள செய்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை

அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளமான Sydney morning Herald இல் நேற்று (24) வெளிவந்த செய்தியொன்றுக்கு அமைய, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 2009 ஆம் ஆண்டில் விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றியபோது, அவரது பணிக்குழாமின் உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தனிப்பட்ட கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு சம்பவத்துடன் தமக்கு எவ்விதமான தொடர்போ பங்களிப்போ இருக்கவில்லையென தெரிவிகும் ஜனாதிபதி அவர்கள்,          மேற்குறிப்பிட்ட செய்தி…

சமுர்த்தி இயக்கம் வினைத்திறன்மிக்க ஒரு இயக்கமாக மாற்றியமைக்கப்படும் – ஜனாதிபதி

கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் ஊழியர் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்திற்குள்ளான நிலையில் திருப்தியற்ற ஒரு அரச நிறுவனமாக மாறியுள்ள சமுர்த்தி இயக்கத்தை மிகவும் வினைத்திறனும் பயனுறுதியும்வாய்ந்த ஒரு நிறுவனமாக ஆக்கி நாட்டுக்கு பயனுள்ள ஒரு நிறுவனமாக மாற்றியமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். குறித்த எல்லா தரப்பினர்களினதும் பங்குபற்றுகையுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்…

2015 க.பொ.த. சாதாரண தர திறமைச் சித்தியாளர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்து நாட்டின் முதல் 10 இடங்களைப் பெற்ற 12 மாணவர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். இம்மாணவர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களுக்கான பணப் பரிசில்களும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டதுடன், மடி கணனிகளும் பரிசாக வழங்கப்பட்டது. 2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்து நாட்டில் முதலாம் இடத்தைப்…

நவகமுவ புராதன பத்தினி தேவாலயத்தில் பளிங்கினால் செய்யப்பட்ட ஸ்ரீ பத்தினி அம்மன் சிலை ஜனாதிபதி அவர்களினால் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது…….

பலநூறு வருடங்களின் பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நவகமுவ புராதன பத்தினி தேவாலயத்திற்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பத்தினி அம்மன் பளிங்கு சிலையினை மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நவகமுவ ஸ்ரீ சுகத்த பிம்பாராம ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய மல்வானே பஞ்ஞாசார அனுநாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இன்று முற்பகல் நவகமுவ ஸ்ரீ சுகத்த பிம்பாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மதக் கிரியைகளில்…

வரலாற்று பிரசித்திபெற்ற தலதா உத்சவம் முற்றுப்பெற்றமையினை அறிவிப்பதற்கான செய்தி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது….

உலகவாழ் பௌத்த மக்களின் பெருமதிப்பிற்குரிய கண்டி புனித தந்ததாதுவிற்காக வருடாந்தம் நடாத்தப்படும் எசல பெரஹரா இம்முறையும் வெகு விமர்சையாக நடாத்தி முடிக்கப்பட்டமைக்கான அறிவித்தலை சம்பிரதாயபூர்வமாக தியவடன நிலமே திலங்க தேல அவர்கள் இன்று (18) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்தார். பெரஹரா மூலம் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தியவடன நிலமே திலங்க தேல உள்ளிட்ட சத்தர மகா தேவாலயங்களினதும் ஏனைய தேவாலயங்களினதும் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில்…

சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணியோத்சவம் ஜனாதிபதி தலைமையில்…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பொலனறுவை சிறி விஜயபா பிரிவெனாவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணியோத்சவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (18) பிற்பகல் பொலனறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. பொலனறுவை மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பொலனறுவை சிறி விஜயபா பிரிவெனாவின் ஓய்வுபெற்ற பிரதி பிரிவெனாதிபதி சங்கைக்குரிய அலவ்வ…

மத்திய மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய நாட்டு விவசாய மற்றும் கால்நடை வள கண்காட்சி இன்று (18) முற்பகல் நுவரெலியா நகர மண்டப வளவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியின் நோக்கம் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மாகாணத்தின் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு விவசாயத்துறை சம்பந்தமான அறிவினை வழங்குதல், விவசாயத்தினை மேம்படுத்துதல் ஆகியனவாகும். நுவரெலியா, கண்டி, மற்றும் மாத்தளை மாவட்டங்கள்…

NEW