Month: டிசம்பர் 2016

சங்கைக்குரிய தவுல்தென ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரருக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

ஸ்ரீ லங்கா அமரபுர நிகாயவின் சங்கைக்குரிய தேரர் தவுல்தென ஞானிஸ்ஸர மகாநாயக தேரரின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சங்கைக்குரிய தேரரின் நுகேகொட பாகொட ஸ்ரீ வித்யாவிஜயராம விகாரைக்கு இன்று (31) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, தேரர் அவர்களைச் சந்தித்து அவரது சுகதுக்கங்களைக் கேட்டறிந்ததுடன், அவரது நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தித்தார். எண்வகைப் பூஜைப்பொருட்களையும் ஒரு நினைவுச் சின்னத்தையும் ஜனாதிபதி தேரருக்கு வழங்கி வைத்தார். விகாரையில்…

ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

      நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய புதிய எதிர்பார்ப்புக்களுடன் மலர்ந்திருக்கும் புத்தாண்டில், பேண்தகு யுகத்தின் ஊடாக நாட்டிலிருந்து வறுமையை அகற்றி வளமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் முழுமையான புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சுபீட்சம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் பற்றிய புதிய எதிர்பார்ப்புகளுடன்…

வில்பத்து சரணாலயத்தை விரிவுபடுத்தி வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி  தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வனஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வில்பத்து உள்ளிட்ட அனைத்து பெருங்காடுகளையும் ஆகாயத்திலிருந்து தொடர்ச்சியாக கண்காணிக்கக்கூடிய செயற்திட்டத்தை துரிதமாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.  சுற்றாடல் அமைச்சுக்குரிய நிறுவன தலைவர்களுடன் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள்…

நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது – ஜனாதிபதி

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாக கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். மானிட பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற சிறப்புமிக்க வெற்றிகளில், மதம் சார்ந்த விடயம் முன்னிலையிலுள்ளது. மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளே அவர்கள் பிறரிடத்தில் தயவு காட்டுவதற்கும் அவர்களது உரிமைகள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெறும் நத்தார் பண்டிகையை…

இயற்கையின் ஆசீர்வாதத்தால் மழை பெய்து நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சொறிவில ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை

நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதுடன் மழையினால் வயல்வெளிகளில் நீர் நிறைந்து வளப்படுத்த வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விசேட தேவ பூஜை இன்று (24) முற்பகல் பொலன்னறுவை சொறிவில ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் அதில் கலந்துகொண்டார். ஜனாதிபதி அவர்கள் இந்து சமய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், அங்கு நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். மகாவலி பீ மற்றும் சி வலயத்திலுள்ள விவசாய மக்கள் ஒன்றிணைந்து இந்த சமய நிகழ்வினை ஏற்பாடு…

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களமும் சிவில் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்த ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தேசத்தின் கீர்த்திமிக்க வரலாற்றினதும் பண்பாட்டினதும் சாட்சிகளாக இருப்பது தொல்பொருள்களும் அரும்பொருள்களுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை அழிவடைவது நாட்டின் வரலாறும் பண்பாடும் அழிவடைவதைப் போன்றது என்றும் தெரிவித்தார். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 219 வீடுகளுக்கான…

பதவிக்காலம் நிறைவடைந்து செல்லும் பான் கீ மூன் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விடைபெறும் பான் கீ மூன் அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (22) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தனது பதவியிலிருந்து விடைபெறமுன்னர் இலங்கை ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்ட பான் கீ மூன் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியதுடன் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என குறிப்பிட்டார். ஐக்கிய…

2016 அரச நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில்…

2016 அரச நத்தார் விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (22) பிற்பகல் நீர்கொழும்பு, பிரதான வீதி தேவாலய வளாகத்தில் இடம்பெற்றது. ‘கிறிஸ்து பிறப்பின் மூலம் புதிய மனிதராக இடமளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற அரச நத்தார் விழா பேராயர் அதிவணக்கத்துக்குரிய காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையில் பக்தி கீதம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்றது. தற்போதய சமூகத்திலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து சமாதானம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு நத்தார் பண்டிகை மிகச்சிறந்த…

இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலோபாய அணுகுமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் வறுமை நிலையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடன் உலகளாவிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை பூர்த்திசெய்வதற்கு 2017ஆம் ஆண்டிலிருந்து பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இச் செயற்றிட்டங்கள் குறித்த நீண்ட கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது. இது தொடர்பாக குறுகியகால செயற்றிட்டங்களை அமுல்படுத்துதல் மிகவும் உசிதமானது எனச்…

தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்த நிகழ்ச்சித்திட்டம் அவசியம் – ஜனாதிபதி

தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்த நிகழ்ச்சித்திட்டம் அவசியம் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை கண்டறிந்து அவற்றை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப்படுத்துவது தொடர்பாக இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.…

NEW