Month: ஜனவரி 2017

பிரிவெனா கல்வியை உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் செயற்திட்டம் தேசிய பௌத்த புத்தி ஜீவிகள் சபையின் பாராட்டு

இந்நாட்டின் பிரிவெனா கல்வியை வலுப்படுத்தி அதன் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆற்றப்படும் பணிகள் தேசிய பௌத்த புத்தி ஜீவிகள் சபையின் பாராட்டுக்குள்ளாகியுள்ளன. தேசிய பௌத்த புத்தி ஜீவிகளின் சபை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பிரிவெனா கல்வியை முன்னேற்றி அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்கள் குறித்து பிரிவெனா பணிப்பாளர் பேராசிரியர் வண. நாபிரித்தன்கடவர ஞானரத்தன…

டெங்கு ஒழிப்புக்கு புதிய செயற்திட்டம்

வேகமாக பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக புதிய செயற்திட்டமொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவிக்கிறார். உயிர்க்கொல்லி டெங்கு நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயற்திட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தேசிய பல் மருத்துவமனையின் (போதனா) முதற் கட்டமான புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைத்தல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்…

வீரமிக்க படைவீரர்களின் உயிர்த்தியாகம், அர்ப்பணிப்புக்களை நன்றியுடன் நினைவுகூருதல் போன்று எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக அவர்களைப் பலப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுகிறோம் – ஜனாதிபதி

கடந்த போர்க்காலத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலீஸார் உட்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரினதும் உயிர்த்தியாகங்கள், அர்ப்பணிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு வழங்கக்கூடிய உயர் கௌரவத்தை வழங்குவது போன்றே எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக அனைத்து வகைகளிலும் அவர்களை பலப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சிங்க ரெஜிமென்றுக்கு ஜனாதிபதி கோல் மற்றும் ரெஜிமென்ற் கோல் வழங்குவதற்காக இன்று (30) பிற்பகல் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு…

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிப்பு

மத்திய வங்கியின் பிணைமுறை தொடர்பாக எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்களினால் விசாரணை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் கங்கானி தந்திரி சித்ரசிறிஇ பிரசன்ன சுஜீவ ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுபிள்ளை ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த நான்கு வருடங்களில் நாட்டின் வனப்பிரதேசம் 32 விகிதமாக அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தற்போது நூற்றுக்கு 27, 28 விகிதமாக உள்ள நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த நான்கு வருடங்களில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் தனது திட்டமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். உலகிலுள்ள ஏனைய நாடுகளில் போன்று எமது நாட்டிலும் காலநிலை மாற்றங்களினால் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பசுமை பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிர்வாயு, சேதனப் பசளை,…

அடுத்த நான்கு வருடங்களில் நாட்டின் வனப்பிரதேசம் 32 விகிதமாக அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தற்போது நூற்றுக்கு 27, 28 விகிதமாக உள்ள நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த நான்கு வருடங்களில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் தனது திட்டமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். உலகிலுள்ள ஏனைய நாடுகளில் போன்று எமது நாட்டிலும் காலநிலை மாற்றங்களினால் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பசுமை பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிர்வாயு, சேதனப் பசளை,…

முன்னணி திரைப்பட நடிகை சுவர்ணா மல்லவாரச்சி பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்

முன்னணி திரைப்பட நடிகை சுவர்ணா மல்லவாரச்சியின் திரைப்பட வாழ்வுக்கு 50 வருடங்கள் நிறைவுக்கான பாராட்டு விழா கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனீ திரையரங்கில் இடம்பெற்றது. தனது 50 வருட திரைப்பட வாழ்வில் சுவர்ணா மல்லவாரச்சி இலங்கை திரைப்படத் துறைக்கு செய்த சேவையைப் பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் விசேட விருது வழங்கப்பட்டது. ‘சினிமாவில் பெண் சுவர்ணா மல்லவாரச்சி 50 வருட திரைப்படப் புகழ்’ என்ற நினைவு…

கல்வி தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு.

நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை உள்ளடங்கிய கல்வி தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவுகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இன்று (26) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டன. கல்விக்கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவும் தேசிய கல்வி நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தேசிய கொள்கை சீர்திருத்தங்களை மேலும் பலப்படுத்தி அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் புதிதாக உருவாகும் தேவைகள் மற்றும் சவால்களுக்கு…

சர்வதேச சுங்க தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் பற்றிய விழிப்புணர்வு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இவ் விழிப்புணர்வானது ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி அவர்கள்  மேலும் தெரிவித்தார். சுங்க தினத்தின் இவ்வருட தொனிப்பொருளான ”பயனுள்ள தேச வரைறைகளின் முகாமைத்துவத்திற்கான தரவுப் பகுப்பாய்வு” என்பதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை சுங்க திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று(26) முற்பகல்…

குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது

குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நடந்த சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிலரால் குற்றஞ் சாட்டப்பட்டாலும் கூட ஊழல்இ மோசடி மற்றும் தவறான நிர்வாகம் என்பன அதிகளவில் காணப்பட்ட கடந்த அரசாங்கத்திலிருந்து தான் பதவி விலகியது மீண்டும் அவ்வாறானதொரு நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்திக் கூறினார். இன்று (25)…

NEW