Month: பிப்ரவரி 2017

லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாண வேலைகளை விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள இருதய நோய் பிரிவுடன் இணைந்த முழு வசதிகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாண வேலைகளை விசேட திட்டமாக கருதி விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த திட்டத்தின் செயற்பாடுகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்படி ஆலோசனை வழங்கினார். கொழும்பு லேடி…

ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் அவர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தார்

பதவியிலிருந்து ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் அவர்கள் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார். அவரது சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி, அவரது எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துத் தெரிவித்தார்.

பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது –  ஜனாதிபதி

உலக பொருளாதார நெருக்கடியினால் நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கொழும்பு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று (28) முற்பகல் இடம்பெற்ற பேண்தகு நிதி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். சுமார் முப்பது சதவீதமான நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதுடன், 2017ஆம் ஆண்டினை வறுமையை இல்லாதொழிக்கும் ஆண்டாக…

இம்முறை இலங்கையில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழா மற்றும் 2017 உலக பௌத்த மாநாட்டு ஏற்பாடுகள் பற்றிய மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று (27) ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழா மற்றும் 2017 உலக பௌத்த மாநாடு ஆகியவற்றை இலங்கையில் நடத்த வாய்ப்பு கிடைத்தமை நீண்டகால பௌத்த வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட நாடென்ற வகையிலும் தேரவாத பௌத்தத்தின்…

இலங்கையின் போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்துக்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பு வழங்ப்படும் – சீசெல்ஸ் ஜனாதிபதி

இலங்கையின் போதைப்பொருள் செயற்திட்டத்துக்கு தனது நாட்டின் உயந்த பட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி பவுரே (னுயnலெ குயரசந) அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி பவுரே அவர்கள் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்த சீசெல்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கௌரவ…

அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். பதவியுயர்வு பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமது தொழிற்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தமது அறிவு மற்றும் ஆற்றல் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு…

படைவீரர்களுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (27) முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர்…

பேராசிரியர் காலோ பொன்சேகாவின்  சுகநலன் விசாரிப்பதற்காக ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு விஜயம் …

திடீர் சுகவீனமுற்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பேராசிரியர் காலோ பொன்சேகா அவர்களது நலன் விசாரிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (26) முற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். காலோ பொன்சேகா அவர்களது சுகநலன்களை ஜனாதிபதி அவர்கள் விசாரித்து உரையாடினார்.  

கணேகம அரமணபொல ரஜமகா விகாரையின் பொன்வேலி மற்றும் அட்விசி விகாரை திறப்புவிழா ஜனாதிபதி தலைமையில்

மனிதாபிமானம், கருணை மட்டுமன்றி நற்பண்புகளையும் இல்லாமற்செய்து போட்டிக்கு மட்டும் முகங்கொடுக்கும் தற்போதய சமூகத்தை சுகப்படுத்தக்கூடிய ஒரேயொரு வழி சமய கோட்பாடுகளே என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஆகவே இளம் தலைமுறையினரை வழிபாட்டு மையங்களுக்க ஈர்த்து சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சமயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக ஒன்று சேர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரத்தினபுரி, கணேகம அரமணபொல ரஜமகா விகாரையின் பொன்வேலி மற்றும் அட்டவிசி விகாரையை…

எச்.ஸ்ரீ நிஸ்ஸங்க அவர்களது 63 ஆவது நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பொது சொத்துக்களையும் அரச வளங்களையும் தவறாக பாவித்து, பணத்தின் பின்னால் சென்று தமது சுயலாபங்களை மட்டும் சிந்திக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் ஸ்ரீ நிஸ்ஸங்க போன்ற நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யவேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (26) பிற்பகல் ஸ்ரீ ஜமுனா விகாரையில் நடைபெற்ற அமரர் முன்னாள் செனட் சபை உறுப்பினர் சட்டத்தரணி எச்.ஸ்ரீ நிஸ்ஸங்க அவர்களது 63 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால…

NEW